articles

img

பி.பள்ளிப்பட்டியும் கு.அண்ணாமலையும் - ஆதவன் தீட்சண்யா

17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சேந்தமங்கலம் வழியாக சேலம் வந்த மறைப்பணியாளர் இராபர்ட் டி நொபுலி அம்மாவட்டத்திற்கு கிறிஸ்தவத்தைக் கொண்டுவந்து சேர்த்ததாக தெரிவிக்கிறது ‘மேனுவல் ஆஃப் த சேலம் டிஸ்ட்ரிக்ட்’. சற்றொப்ப அப்போதே –1633ஆம் ஆண்டிலிருந்தே தனிப்பங்காக செயல்படத் தொ டங்கிய கோவிலூருடன் (அறியப்படாத கிறிஸ்தவம், நிவேதிதா லூயிஸ்)  பின்னாட்களில் பி.பள்ளிப்பட்டி நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததாக தெரி கிறது. அதிகாரப்பூர்வ சான்றொன்றின்படியே பார்த்தா லும்கூட 1750ஆம் ஆண்டிலிருந்தே அங்கு கத்தோலிக் கர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அவ்வகையில் தொன்மையான கிறிஸ்தவ ஊர்களில் பள்ளிப்பட்டியும் ஒன்று. ஆனால் இங்கு பரவத்தொடங்கி ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாகியும் இன்னமும் தலித்து களைத் தவிர வேறெந்த சாதியினரும் கிறிஸ்த வத்தைத் தழுவவில்லை. என்றாலும் பள்ளிப்பட்டியில் இருக்கும் தூய கார்மேல் அன்னை ஆலயம்,  மசபியேல்  மலை புனித லூர்து அன்னை கெபி, மாதா சொரூபம், புனித லூர்து அன்னை திருத்தலம் ஆகியவை யாவரும் பேதமின்றி வந்து வணங்கிச்செல்லும் தலங்களாகும்.

அதிலும் தென்னிந்திய அளவில் பிரசித்தமான பாஸ்கோ திருவிழா சமயத்தில் கெபியின் பெருந்திடல் கொள்ளாத அளவுக்கு பன்மதத்தவர் பல்லாயிரக்க ணக்கில் வந்து குழுமுகின்றனர்.  இவர்களெல்லாம் வெகுஇயல்பாக வந்து வழி பட்டுச் சென்றுகொண்டிருக்கையில் அரசியல் காளான் அண்ணாமலை ஜனவரி 8அன்று இங்கு வந்தது மட்டும் ஏன் சர்ச்சைக்குள்ளானது? மாதாவுக்கு மாலையணி விக்கக்கூடாது என அவர் தடுக்கப்பட்டது ஏன்?   விசாரித்தறிய ஜனவரி 10 அன்று பி.பள்ளிப்பட்டிக்கு சமூக நல்லிணக்க மேடையின் இரா.சிசுபாலன், சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் ஏ.குமார், யாசட் செய லாளர் வழக்குரைஞர் ராகுல் ஆகியோருடன் நான் சென்றேன். பள்ளிப்பட்டியில் “சம்பவம்” செய்த  இளைஞர்கள் உள்ளிட்ட பலரிடமும் உரையாடி னோம். உணர்ச்சிவயப்படுகிறவர்களாக அல்லாது  நாட்டுநடப்புகளை உன்னிப்பாக கவனிக்கக்கூடி யவர்களாகவும் எதிர்வினை ஆற்றக்கூடியவர்க ளாகவும் இருக்கின்றனர் அந்த இளைஞர்கள். அத்து மீறி தாண்டும் ஆட்டுக்குட்டிக்கு என்ன செய்வார்களோ அதையேதான் அண்ணாமலைக்கும் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.  

வெறுப்பை விதைக்கும் பாஜக
கெபியையொட்டியும் திடலைச் சுற்றியும் 1960ஆம் ஆண்டு முதல் லூர்துபுரம் என்கிற குடியி ருப்புப்பகுதி உருவாகி தற்போது தனி வார்டு என்கிற அளவுக்கு விரிவடைந்துள்ளது. இங்கு (தலித்) கிறிஸ்தவர்களன்றி வேறெவரும் வசிக்கவில்லை. இவர்களில் ஒருவர்கூட பாஜகவில் இல்லை. ஆனா லும் 7.1.2024 மாலை அப்பகுதியின் நெடுஞ்சாலை நெடுக பாஜக கொடிகள் வெளியூர் கூலி ஆட்க ளால் கட்டப்பட்டிருக்கின்றன. மதச்சிறுபான்மையின ருக்கும் தலித் விடுதலைக்கும் எதிராக வெறுப்பை விதைத்துவரும் பாஜகவின் கொடியை அம்மக்களது வாழ்விடத்தில் ஊன்றியதே ஆத்திரமூட்டும் நடவடிக்கைதான்.  

என் மண் (மூளை!), என் மக்கள் என்று எப்பவாவது ஏதாச்சுமொரு ஊரின் ஒரு தெரு முக்கில் கார்விட்டு இறங்கி நாலடி நடப்பதை நடை பயணம் என்று கேலிக்கூத்தாடிக் கொண்டிருக்கும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை 08.01.2024 மாலை அவ்வழியாக அரூர் செல்வதாகவும், லூர்து புரத்தில் இறங்கி மாதா சுருவத்துக்கு மாலை அணி விக்கப்போவதாகவும் செய்தி கிடைக்கிறது. சொந்த  ஆதாயங்களுக்காக ஏற்கனவே பல்வேறு கட்சிக ளுக்கும் தாவி அரசியல் பாதுகாப்பை பெற்றுவந்த உள்ளூர்க்காரர் ஒருவர்தான் –ஆமாம் ஒரே ஒருவர் தான் - இப்போது அதே காரணங்களுக்காக அண்ணா மலையுடன் சகவாசம் வைத்துக்கொண்டு இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பதாக கிடைத்த தகவல் அப் பகுதி மக்களிடையே சீற்றத்தை உருவாக்கியுள்ளது.  

எட்டாம் தேதி மாலை 5 மணியளவில் கார்களில் வந்திறங்கிய அண்ணாமலை கும்பலுக்கு மாதாவை வணங்குவதுதான் நோக்கமென்றால் ஆரவாரமில்லா மல் திடலுக்குள் நுழைந்து தேவாலயத்தின் பின்புறம் திறந்தவெளியில் உள்ள மாதாவை வணங்கிவிட்டுச் சென்றிருக்கலாம்.

ஆனால் அவர்கள் மாதாவிடம் வருவதற்கு தேவாலயத்திற்குள் நுழைந்து பலிபீடத்தை யொட்டிய வாயிலை தேர்வு செய்துள்ளனர். அதுவும் அங்கொரு பிரச்சனையில்லை. பின் எதற்காக லூர்து புரம் இளைஞர்களும் ஊர்மக்களும் திரண்டுவந்து மாதாவுக்கு, அண்ணாமலை மாலை அணிவிக்கக் கூடாதென்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்? மணிப்பூர் உள்ளிட்டு நாடுமுழுதும் சிறுபான்மையினர் மீது வெறுப்பினைப் பரப்பி மக்கள் ஒற்றுமையைச் சிதைத்து பிரிவினையை உண்டாக்கி வன்முறையைக் கட்ட விழ்த்துவிடும் அண்ணாமலை கும்பலுக்கு மாதாவை வணங்கும் அருகதை இல்லை என்பதை உணர்த்தவே இந்த எதிர்ப்பு. 

ஆத்திரமூட்டி சீர்குலைவு  வேலை செய்யவே...
பி.பள்ளிப்பட்டி மக்களது எதிர்ப்பில் பொதிந்துள்ள உண்மையை எதிர்கொள்ளும் அரசியல் திராணியற்ற அண்ணாமலை, கோவிலை அரசியலாக்க வேண்டாம், கோவில் எல்லோருக்கும் பொது என்றார். இப்படி சிதம்பரம், ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் போய் வாதாடு வாரா என்பது ஒருபுறமிருக்க, திமுககாரன் மாதிரி பேசாதீர்கள், மணிப்பூரைப் பற்றி பேசும் நீங்கள் இலங்கையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்தீர்கள் என்று அடுத்த திசைதிருப்பலை ஆரம்பித்தார். (சரி, காங்கிரசும் திமுகவும் செய்யத் தவறியதை அடுத்த பத்தாண்டுகளாக ஆட்சியிலி ருக்கும் பாஜக அரசு எடப்பாடியுடன் சேர்ந்து ஏதாச்சும் செய்திருக்கலாமே என்று கேட்டால் அதற்கு என்ன உளறுவாரோ!)  ஆனால் இளைஞர்கள் தாங்கள் எல்லாவற்றையும் படித்தறிந்து சுய அறிவோடு இருப்பதாகவும், தங்களது கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுமாறும் வற் புறுத்தவே, ஆத்திரமடைந்த அண்ணாமலை 10 ஆயி ரம் பேரை திரட்டிவர்றேன் தடுத்துப் பார் என்று முண்டா  தட்டியதுடன் எல்லா ஊரையும் கூட்டுங்ணே என்று மிரட்ட ஆரம்பித்தார்.

இந்தாள் பேச்சைக்கேட்டு இவரது நிழல்கூட வராது என்பது தெரிந்திருந்தும் இப்படி பேச காரணம், பி.பள்ளிப்பட்டியில் நிலவும் மத நல்லி ணக்க உணர்வில் கோடாரி போடுவதும், கிறிஸ்த வர்களுக்கு எதிராக மற்ற ஊர்களைத் தூண்டிவிடுவ தும்தான்.  நாங்கள் விசாரித்தவரை, அண்ணாமலைக்காக ஊர்ப்புள்ளி ஒருவர் பங்குத் தந்தையிடம் பேசி அனுமதி பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், பள்ளிப்பட்டியில் இறங்குவதோ மாதாவுக்கு மாலையணிவிப்பதோ அண்ணாமலையின் பயணத்திட்டத்தில் இல்லை யென்றும், ஆத்திரமூட்டி சீர்குலைவு வேலை செய்வ தற்காகவே அவர் திடீரென இங்கு இறங்கியதாகவும் ஊர்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

கிறிஸ்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டதா?
அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல்  சிறுபான்மை/ கிறிஸ்தவ வெறுப்பில் நொதித்தவர் கள். பச்சிளம் குழந்தைக்குப் பால் வார்க்கவும்கூட மனமிளகாதவர்கள் மைக்கேல்பட்டி மாணவி படிப்புச் சுமையின் அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கட்டாய மதமாற்றத் துன்புறுத்த லால் ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என்று இந்த  அண்ணாமலை பொய்ச்செய்தி பரப்பி நூற்றாண் டுக்கும் மேலான அந்தப் பள்ளியின் கல்விப்பணிக்கு களங்கம் கற்பித்தார். அத்துடன் மதமாற்றம் தமிழ கத்திலே வேகமாக பரவும் ஒரு விஷச்செடி, இங்கே உடனடியாக மதமாற்ற தடைச்சட்டம் தேவை என்று  கூப்பாடு போட்டதை பள்ளிப்பட்டி மக்கள் நினைவு படுத்துகின்றனர். மதமாற்ற ஆபத்து என்னும் சங்கிகளின் கூப்பாட்டிற்கு அப்பால், 1951ஆம் ஆண்டு முதல் இப்போதுவரையிலும் கூட நாட்டின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.3 சதவீதம் என்பதைச் சுற்றித்தான் இருக்கிறது.  

கிறிஸ்தவர்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்

வர்ணாசிரம அநீதியின் கொடுங்கோன்மை யிலிருந்து தப்பிக்கும் நோக்குடன்  பலர் வேறு மதங்களைத் தழுவுகிறார்கள். அவர்களைத் தடுக்க சங் கும்பல் எந்த எல்லைக்கும் செல்வார்கள். பாதிரி யார் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு மகன்களை எரித்துக் கொன்றதைக்கூட மதமாற்றத் தடுப்பு நடவ டிக்கை என்று அவர்களால் நியாயப்படுத்த முடியும். பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டங்கள், யார் மீது வேண்டு மானாலும் கட்டாய மதமாற்ற முயற்சி துன்புறுத்தல் என்று பொய்வழக்குப் போடுவதற்கான கெடு வாய்ப்பினை வழங்குகிறது.

கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் சமூகப்பணிசார் நிறுவனங்களை முடக்குவ தற்கு இச்சட்டங்கள் போதுமானவை அதேபோல பசுவ தைத் தடுப்புச்சட்டங்கள், லவ் ஜிகாத் ஆகியவை கிறிஸ்தவர்களையும் தாக்கும் விதத்திலேயே வடிவ மைக்கப்பட்டுள்ளன. தேவாலயங்களையும் அவற்றின் சொத்துக்களை யும் அடித்துப் பிடுங்கும் அட்டூழியத்துக்கும் குறை வில்லை. அதன் உச்சமாக, டாமனில் 400 ஆண்டுகால தொன்மையான அன்னை அங்கஸ்டியாஸ் தேவால யத்தை இடித்துவிட்டு அவ்விடத்தில் கால்பந்தாட்ட மைதானத்தை அமைக்கப்போவதாக நிர்வாகரீதி யாக சங்கிகள் செய்த முயற்சி கடும் கண்டனத்திற் குள்ளான பிறகே கைவிடப்பட்டது.  

2023ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களிலேயே  கிறிஸ்தவர்கள் மீது 525 தாக்குதல்கள் நடந்திருப்ப தாகவும் மணிப்பூர் தாக்குதல்களைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் கூடுமெனவும் ‘யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம்’ என்ற அமைப்பு ஆய்வறிக்கை யை வெளியிட்டதுடன் குடியரசுத்தலைவரிடமும் நேரில் முறையிட்டுள்ளது. பதிவானவற்றை விடவும், அச்சத்தினாலும் காவல்துறையின் உதாசினத்தினா லும் பதிவாகாத தாக்குதல்களின் எண்ணிக்கை பன் டடங்காகும். மணிப்பூரில் 36 மணிநேரத்தில் 249 கிறிஸ்தவ தேவாலயங்கள்  எரிக்கப்பட்டதாக இம்பால் ஆர்ச் பிஷப் தெரிவிக்கிறார் (இந்தியன் எக்ஸ்பிரஸ், 18 ஜூன் 2023) 

மோடியின் மௌனம் உணர்த்துவது என்ன?
பாஜக ஆளும் மாநிலங்கள் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களில் முன்னிலை வகிப்பதாக கூறும்  இவாஞ்செலிக்கல் ஃபெல்லோஷிப் ஆப் இந்தியா (Evangelical Fellowship of India) அமைப்பின் அறிக்கை, சமீபத்திய ஆண்டுகளில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் (சாதியத்தாலும்) அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருக்கி றது என்று அபாயமணியை ஒலிக்கச் செய்திருக்கிறது.

இந்த நிலைமைக்கும் அண்ணாமலைக்கும் தொடர் பில்லையா?  கடந்த 2023 ஏப்ரலில் ஈஸ்டரின்போது தில்லி சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்திற்கு பிரதமர் வந்ததை நல்லிணக்க சமிக்ஞையாக கருதி நிலைமை சீராகும் என்று கிறிஸ்தவ மதத்தலைவர்கள் தெரிவித்த நம்பிக்கை பொய்த்துப் போனது. கிறிஸ்தவர்கள் மீது பரப்பப்படும் வெறுப்புக்கும் அதிகரிக்கும் தாக்குதல்க ளுக்கும் எதிராகப் பேசுங்கள் என்று அரசியல் சாசன உயர் பொறுப்புகளை வகித்த 93 ஆளுமைகள் மன்றாடிய பிறகும்கூட மோடி வாய்திறக்கவில்லை. 2023 டிசம்பர் 25 அன்று, தான் அளிக்கும் கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்க வருமாறு மோடி விடுத்த அழைப்பி னை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதத் தலைவர்கள் நிராகரித்துவிட்டனர்.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இயேசுவையும் கிறிஸ்தவ சமூகம் நாட்டுக்கு ஆற்றும் பணிகளையும் கிறிஸ்தவர்களி டையே போற்றிப் பேசும் மோடி, தனது ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ சமூகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்க ளுக்கு எதிராக எதுவும் பேச மறுக்கிறார் என்பது தான்.  மோடியின் சேவகன் அண்ணாமலையின் அத்துமீற லும் மிரட்டலும் அதிலொன்று என்பதற்கும் அப்பால்  அதில் வேறொன்றுமில்லை என்பதை பள்ளிப்பட்டி மக்கள் அறிந்தேயிருக்கிறார்கள்.  இப்போது நீங்களும் அறியக்கடவீர்.

கட்டுரையாளர்: தமுஎகச பொதுச் செயலாளர்

;